கொழும்பு: தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின்
தலைவரும் தமிழர் மகாசபையின் அம்பாறை
மாவட்ட வேட்பாளருமான கருணா அம்மான்
என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி
முரளீதரனிடம் வாக்கு மூலமொன்றைப்
பெறுவதற்காக குற்றப்புலனாய்வுப் பிரிவினர்
அழைப்பு விடுத்துள்ளனர்.


நாவிதன்வெளி பிரசேத்தில்
விடுதலைப்புலிகளில் இருந்த காலத்தில்
ஆனையிறவில் 3 ஆயிரம் இராணுவத்தினரை
ஒரே இரவில் கொன்றதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கருணா தெரிவித்துள்ள
கருத்துக்கு எதிராக தென்னிலங்கையில், பல
எதிர்ப்புக்களும் விமர்சனங்களும்
எழுந்துள்ளது.