கொழும்பு: நாளை ஜூன் 14ஆம் திகதி முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நள்ளிரவு 12.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது. நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மறு அறிவித்தல் வரை, இவ்வாறு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அரச, தனியார் ஆகிய இரு பிரிவுகளைக் கொண்ட நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களை நடாத்திச் செல்வது, அன்றாட வாழ்க்கையை நடாத்திச் செல்லுதல் உள்ளிட்ட, கொரோனாவிலிருந்து பாதுகாப்புப் பெறுவது தொடர்பான சுகாதார பரிந்துரைகளை தொடர்ந்தும் முற்று முழுதாக பின்பற்றுமாறு, அரசாங்கம் அனைத்து தரப்பினரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளது.