கொழும்பு: தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கான ஒரு நாள் சேவை ஜூன் 22 ஆம் தேதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது. கொவிட்-19 தொற்று நிலை காரணமாக, கடந்த மார்ச் 16ஆம் திகதி முதல் ஒரு நாள் சேவை தேசிய அடையாள அட்டை விநியோகம் இடைநிறுத்தப்பட்டிருந்தது.

ஆயினும் பரீட்சை நடவடிக்கைகள், நேர்முகத் தேர்வு நடவடிக்கைகள், சாரதி அனுமதிப்பத்திரம் பெறுதல், கடவுச்சீட்டு பெறுதல் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக, தேசிய அடையாள அட்டைகளை விரைவாக பெற வேண்டிய தேவைகளை கொண்டவர்களுக்காக, அடையாள அட்டைகளை வழங்கும் விசேட வேலைத்திட்டத்தை, பிரதேச செயலகம் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.