கொழும்பு புறக்கோட்டை கபூர் கட்டிடத்தில் இருந்த 200 கடற்படை வீர்ரகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இது குறித்து இலங்கை கடற்படையின் ஊடகப் பேச்சாளர் இசுறு சூரிய பண்டார தெரிவிக்கையில், இது குறித்து மக்கள் குழப்பமடையத் தேவையில்லை. குறித்த கபூர் கட்டிடத்தில் ஒரு கடற்படை வீரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, குறித்த கட்டிடத்தில் இருந்த 200 கடற்படை வீரர்களும் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன் குறித்த கட்டிடமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

நேற்று புதன் கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 53 கடற்படைவீரர்களில் இவரும் ஒருவராவார். நாட்டில் இதுவரை அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் படி 691 கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் 351 பேர் குணமடைந்துள்ளனர்.

நாட்டில் இதுவரை அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள்படி 691 கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் 351 பேர் குணமடைந்துள்ளனர்.

கடந்த மார்ச் 11 ஆம் திகதி நாட்டில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்றினால் 1503 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.