2019/2020 கல்வி ஆண்டு, பல்கலைக்கழக நுழைவுக்கான ஒன்லைன் மூல விண்ணப்பங்கள், எதிர்வரும் ஜூன் 02 ஆம் திகதி நிறைவடையும் என, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) தெரிவித்துள்ளது. மார்ச் மாதம் 26ஆம் திகதி வரை இதற்கான முடிவுத் திகதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்று நிலை காரணமாக, குறித்த விண்ணப்ப முடிவுத் திகதி மேலும் நீடிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பல்கலை மருத்துவ பீட மாணவர்களின் பரீட்சைகள் காரணமாக, எதிர்வரும் ஜூன் 15 ஆம் திகதி அனைத்து பல்கலைக்கழகங்களினதும் மருத்துவ பீடங்களும் மீளத் திறக்கப்படவுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க நேற்று (26) அறிவித்திருந்தார்.