குளியாப்பிட்டி – பன்னலை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கிரிக்கட் விளையாட்டு வீரரான ஷெஹான் மதுஷங்க கைது செய்யப்பட்டுள்ளார். பன்னல பொலிஸாருக்கு கடந்த சனிக்கிழமை கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதாக பன்னல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

கிரிக்கட் விளையாட்டு வீரரான 25 வயதுடைய ஷெஹான் மதுஷங்க அவரது காரில் சென்றுக்கொண்டிருந்த போதே பொலிஸாரால் மறிக்கப்பட்டு தோனனை மேற்கொண்ட நிலையில் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இதன்போது அவரிடமிருந்து 2 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபர் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவர் தொடர்பான மேலதிக விசாரணைகளை பன்னல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.