கொழும்பு: இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 07 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்று (25) முற்பகல் 10.00 மணியளவில் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,141இலிருந்து 1,148 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 7 பேரும் குவைத்திலிருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என, சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.