கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம்: பிரதமர்

கொழும்பு: ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டுமாயின் தேர்தலை நடத்துவது அவசியமாகும். கலைக்கப்பட்ட பலவீனமான பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதால் எவ்வித பயனும் ஏற்படாது. கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம். கடற்படைக்குள் தான் பிரச்சினை காணப்படுகின்றது. அதனையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோம். மாணவர்களது பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்குவதால் பாடசாலை, பல்கலைக்கழக கற்றல் நடவடிக்கையினை மீள ஆரம்பிப்பதில் சிக்கல் காணப்படுகின்றது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொவிட்-19 வைரஸ் பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள நிலையிலும் மாணவர்கள் தொடர்பில் பொறுப்புடன் செயற்படுவது அரசாங்கத்தின் கடமையாகும். மாணவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுப்பதால் பல்கலைக்கழகம், பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கையினை மீள ஆரம்பிப்பதில் தாமதம் காணப்படுகின்றது. கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. அரச, தனியார் திணைக்களங்கள் திறக்கப்பட்டு சேவை நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றன. பொதுத்தேர்தல் இன்று நீதிமன்றத்தின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மாறுப்பட்ட தர்க்கங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டுமாயின் தேர்தல் நடத்தப்பட வேண்டும். கலைக்கப்பட்ட பலவீனமான பாராளுமன்றத்தை கூட்டுவதால் எவ்வித பயனும் ஏற்படாது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s