இன்று (17) இரவு 7.00 மணியளவில் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 960 இலிருந்து 962 ஆக அதிகரித்ததோடு, 7.30 மணியளவில் மேலும் 02 பேர் அடையாளம் காணப்பட்டு அவ்வெண்ணிக்கை 962 இலிருந்து 964 ஆக அதிகரித்ததோடு, இரவு 8.30 மணியளவில் மேலும் 06 பேர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து அவ்வெண்ணிக்கை 964 இலிருந்து 970 ஆக அதிகரித்துள்ளது.

இன்று அடையாளம் காணப்பட்ட 10 பேரில், 08 பேர் கடற்படையைச் சேர்ந்தவரக்ள் என்பதோடு, 02 பேர் லண்டனிலிருந்து வந்து வாதுவை ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.

அதற்கமைய இன்றையதினம் (17) இதுவரை கொரோனா வைரஸ் தொற்றிய 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பதோடு, 18 பேர் குணமடைந்துள்ளனர்.

அந்த வகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 970 பேரில் தற்போது 423நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 538 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் இது வரை 09 பேர் மரணமடைந்துள்ளனர்.

இதேவேளை, மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொடர்பிலான சந்தேகத்தின் அடிப்படையில் 209 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.