கொழும்பு: இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 12பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்று (16) இரவு 8.00 மணியளவில் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 937 இலிருந்து949 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது அடையாளம் காணப்பட்ட 12பேரும் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளது.
இன்று அடையாளம் காண்ப்பட்ட ஏனைய இருவரும், மியான்குளம் மற்றும் கந்தக்காடு ஆகிய தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்கமைய இன்றையதினம் (16) இதுவரை கொரோனா வைரஸ் தொற்றிய 14 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பதோடு, 43 பேர் குணமடைந்துள்ளனர்.
அந்த வகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 949 பேரில் தற்போது 420நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 520 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் இது வரை 09 பேர் மரணமடைந்துள்ளனர்.
இதேவேளை, மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொடர்பிலான சந்தேகத்தின் அடிப்படையில் 112 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.
அடையாளம் – 949
குணமடைவு – 520
இன்று அடையாளம் – 14
இன்று குணமடைவு – 43
சிகிச்சையில் – 420
மரணம் – 09