காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், காத்தான்குடி நகர சபை மற்றும் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா இணைந்து விடுத்துள்ள அறிவித்தல்
இன்று 2020.05.13ஆம் திகதி காத்தான்குடி நகர சபை தவிசாளர், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் மற்றும் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா இணைந்து பெருநாள் காலங்களில் நாம் நடந்து கொள்ள வேண்டிய ஒழுங்கு முறைகள் சம்பந்தமான கலந்துரையாடல் இடம்பெற்றது.

கடந்த சுமார் 3 மாத காலங்களாக சர்வதேச மற்றும் நமது நாட்டில் பரவிய கொரோனா வைரஸ் பேரவலம் காரணமாக இதுவரை சுமார் 290,000 மேற்பட்டவர்கள் மரணித்தும் சுமார் 4 மில்லியனுக்கதிகமான மக்கள் இந்நோய்த் தொற்றுக்குள்ளாகியும் உள்ளனர்.
குறிப்பாக நமது நாடு இவ்வாறான பாதிப்பிற்குள்ளாகிய நிலையில் மக்கள் வழங்கிய பூரன ஒத்துழைப்பின் காரணமாகவும் நமது சுகாதாரத் துறை மற்றும் பாதுகாப்புத் துறையினர் வழங்கிய பாரிய அர்ப்பணிப்பான சேவைகள் காரணமாகவும் தற்போது இந்நோய்த்தொற்று பரவும் விகிதம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருந்தாலும் எதிர்வரும் காலங்களில் இந்நோய்த்தொற்று பாரியளவில் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக சுகாதாரத்துறையினர் எச்சரித்தள்ளனர்.
இருந்த போதும் இந்நோய் பாரிய அளவில் பரவாமல் இருப்பதற்காக வேண்டி நாம் முன்னெச்சரிக்கையான செயற்பாடுகளை கண்டிப்பாக எடுக்க வேண்டிய தேவையுள்ளது.
குறிப்பாக இந்நாட்டின் சில சகோதர இன மக்கள் அனைவரும் தங்களது விஷேட பண்டிகைகளைக்கூட இந்நோய் பரவாமல் அர்ப்பணிப்பாக செயற்பட்டிருகிறார்கள். நமது முஸ்லிம் சமூகமும் எதிர்வரும் பெருநாள் தினங்களிலும் அதற்கு முன்னரான நாட்களையும் மிகக் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் நகர்த்த வேண்டிய தேவையுள்ளது.
அந்தவகையில் கீழ்வரும் ஒழுங்குகளை கண்டிப்பாக அடுத்து வரும் நாட்களில் பின்பற்றுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
- பெருநாள் ஆடைக் கொள்வனவிற்காக பெண்கள் கடைத் தொகுதிகளுக்கு வருவதை கண்டிப்பாகவும் முற்றாகவும் தவிர்ந்துகொள்ளல் வேண்டும்.
- அவ்வாறு அவசியம் தேவையேற்படுமிடத்து ஆண்கள் மாத்திரம் இக்கொள்வனவில் ஈடுபடல் வேண்டும்.
- கடைச்சொந்தக்காரர்கள் வாடிக்கையாளர்களினதும் ஊழியர்களினதும் சுகாதார பாதுகாப்பினைக் கருத்திற்கொண்டு சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, உரிய சுகாதார வழிமுறைகளைப் பேணியும் நடந்து கொள்வதுடன், கூட்டமாக மக்கள் கூடுவதைத் தவிர்த்துக்கொள்ளல் வேண்டும்.
- மேற்படி உரிய சகாதார நடைமுறைகளைப் பேணாத வர்த்தகர்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களை தவிரந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
- புனித றமழானின் இறுதிப் பகுதியில் நாம் இருப்பதால் வீனான செயற்பாடுகளில் இளைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் ஈடுபடாமல் இபாதத்துகளில் தங்களை பூரனமாக ஈடுபடுத்திக் கொள்ளல் வேண்டும்.
- யாசகம் கேட்டு வீடுகளுக்கு வருபவர்களை தங்களது வீடுகளுக்குள் அனுமதிக்காமல் இருப்பதுடன், தங்களது பித்ரா அரிசிகளை வழங்க விரும்புபவர்கள் அதனை உரியவர்களின் வீடுகளுக்குச் சென்று வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
மேற்படி விடயங்கள் தொடர்பில் காத்தான்குடி நகர சபை தவிசாளர், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் மற்றும் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா இணைந்து பல அறிவுறுத்தல்கள் மற்றும் ஆலோசனைகளை பொதுமக்களுக்கு வழங்கியியருந்தும், பொதுமக்கள் இவ்வடயத்தில் அதிக அலட்சியமாக இருப்பது கவலையளிக்கிறது. தங்களது இவ்வாறான அலட்சியப் போக்கினால் ஏற்பாடும் பின்விளைவுகள் பாரதூரமானதாக அமையும் என்பதை தங்களுக்கு எச்சரிக்கையுடன் ஞாபகமூட்ட விரும்கின்றோம்.
எனவே, பொதுமக்கள் மேற்படி அறிவறுத்தல்களை முழுமையாகக் கடைப்பிடித்து தங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.