கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள மாணவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக, இன்றையதினம் (03) முதல் விசேட விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பிரித்தானியாவிலும் அவுஸ்திரேலியாவிலும் சிக்கியுள்ள இலங்கை மாணவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்தது.

இதற்கமைய, ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு சொந்தமான UL 503 எனும் விசேட விமானம், இன்று (03) அதிகாலை 4.40 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து, லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் நோக்கி புறப்பட்டுள்ளது.