கொழும்பு: இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 05 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் மேலும் 02 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று (29) இரவு 7.30 மணியளவில் தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியவர்வர்களின் எண்ணிக்கை 622 இலிருந்து 627 ஆக அதிகரித்துள்ளதுடன், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 134 இலிருந்து 136 ஆக அதிகரித்துள்ளது.
