கடந்த வருடம் இடம்பெற்ற க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், பரீட்சைக்கு தோற்றிய 73.84 வீதமானோர் சித்தியடைந்துள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
- 9 பாடங்களிலும் A சித்தி பெற்றவர்கள் – 10,346 பேர்
- உயர் தரத்திற்கு தகுதி பெற்றவர்கள் – 73.84%
- கணிதத்தில் சித்தியடைந்தவர்கள் – 66.82%
- பரீட்சைக்கு தோற்றியோர் – 556,256 பேர்
- விண்ணப்பித்த பரீட்சார்த்திகள் – 717,246 பேர்

இம்முறை வெளியிடப்பட்ட சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள், மாவட்ட ரீதியிலான அல்லது அகில இலங்கை ரீதியிலான தரப்படுத்தல்கள் வெளியிடப்படமாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.