தேர்தல் ஆணைக்குழுவுக்கு NFGG அனுப்பி வைத்துள்ள கடிதம்!

தலைவர்
தேர்தல்கள் ஆனைக்குழு
தேர்தல்கள் செயலகம்
சரண மாவத்தை
ராஜகிரிய.

ஒத்திவைக்கப்பட்டுள்ள பொதுத் தேர்தல்  தொடர்பாக..

2020 ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறவிருந்த பொதுத் தேர்தல் உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட கொவிட் 19 வைரஸ் பிரச்சினையினால் ஒத்திவைக்கப்பட்டது.

எனினும் 2020 ஜூன் மாதம் 2ஆம் திகதிற்குள் தேர்தலை நடத்த வேண்டுமென்ற காரணத்தை முன்வைத்து அரசாங்கம் அவசர அவசரமாக தேர்தலை நடத்துவதற்கான முன் ஏற்பாடுகளை மேற்கொள்வதை எம்மால் உணர முடிகிறது.

மேலும்  2015 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் 2020 செப்டம்பர்  வரை இருக்கத்தக்கதாகவே 2020 மார்ச் 2இல் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. எனவே மீண்டும் பாராளுமன்றத்தைக் கூட்டி அரசாங்கத்தினை கொண்டு செல்வதற்கான வாய்ப்புக்கள் சட்டரீதியாக இருக்கத்த நிலையில் அவசரமாக ஏன் தேர்தலை இந்த இக்கட்டான சூழ்நிலையில் நடத்த வேண்டுமென்ற கேள்வி எழுகிறது.

இன்று நாட்டில் மக்களின்  சுகாதாரப் பிரச்சினை மற்றும் பொருளாதார நெருக்கடி போன்றவையே முதன்மையானதாகும். எனவே இவற்றிற்கு முன்னுரிமை கொடுத்து செயற்படுவதே அரசாங்கத்தினதும் அனைவரினதும் கடமையாகும்.

அந்த வகையில் மக்களின் உயிரையே கேள்விக்கு உற்படுபடுத்தியுள்ள கொரோனா அச்சுறுத்தல் மற்றும் பொருளாதார நெருக்கடி போன்றவற்றிலிருந்து திருப்தியளிக்குமளவு நாடு இயல்பு நிலைக்கு வந்ததன் பின்பே தேர்தலை நடத்துவது பொருத்தமானது.

மேலும் மரண அச்சதோடும் பொருளாதார நெருக்கடியோடும் மக்கள் வாழும் இந்நிலையில் தேர்தலில் அவர்களை பங்கு கொள்ளச் செய்வதானது  சுயாதீனமானகவும்  சுதந்திரமாகவும் அவர்கள் தமது வாக்குரிமையை பயன்படுத்துவதற்கு சாதகமாகவும் அமையாது  அமையாது. இதனால் மக்களின் உண்மையான விருப்பத்தையும் தெரிவையும்  இந்த தேர்தலில் வெளிப்படுத்தவும் முடியாமல் போகலாம்.

எனவே நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகிய நாம் பொறுப்பு வாய்ந்த ஒரு அரசியல் கட்சி என்ற அடிப்படையில் 2020 ஜூன் 2ஆம் திகதியன்று புதிய பாராளுமன்றம் கூட வேண்டுமென்ற நோக்கில் அதற்கிடையில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டுமென்ற ஏற்பாடுகள் இருந்தால் அதனைக் கைவிடுமாறும் நாடும் மக்களும் இயல்பு நிலைக்கு திரும்பியவுடன் தேர்தலை நடத்துமாறும் மக்கள் சார்பாக வேண்டிக் கொள்கிறோம்.

நன்றி

General Secretary
National Front for Good Governance.(NFGG)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s