காத்தான்குடி: காத்தான்குடி தள – கடற்கரை வைத்தியசாலைக்கு கோவிட் 19 தொற்றுக்குள்ளான கொழும்பு 12 ஒரே வீதியைச் சேர்ந்த 26 பேர் திங்கள் மாலை இராணுவத்தின் பாதுகாப்பில் வந்து சேர்ந்தனர். இவர்களுள் ஒரு தமிழ்ப்பெண் ஒருவரும் ஏனைய அனைவரும் முஸ்லிம்களாவர். இவர்களுள் 18 பெண்களும், 8 ஆண்களும் உள்ளடங்குகின்றனர். மேலும் 3 சிறுவர்களும் உள்ளடங்குவதாகவும், வந்தவர்களுள் அதிகமானவர்கள் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும் தெரியவருகிறது.

Image: Social network