கொழும்பு: நாட்டில் கொரோனா தொற்றினால் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்துவதற்கு அரசாங்கம் அவசரம் காட்டவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். ஏப்ரல் 25ஆம் திகதி தேர்தல் நடத்துவதற்கு முன்னர் திகதி குறிப்பிடப்பட்டது. ஆனால் தற்பொழுது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் தேர்தலை ஒத்தி வைப்பதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்புக்கு எதிராக அரச தரப்பு நீதிமன்றத்தை நாட வில்லை.

ஏப்ரல் 25 ஆம் திகதிக்கு பிறகு புதிய தேர்தல் திகதி ஒன்றை அறிவிக்க ஜனாதிபதிக்கு அரசியலமைப்பின் ஊடாக அதிகாரம் கிடைக்கிறது.
இதன்போது ஜனாதிபதிக்கு புதிய திகதி ஒன்றை அறிவிக்க முடியும்.
எதிரணி தேர்தல் தொடர்பில் பொய் வதந்திகளைப் பரப்பி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.