கொழும்பு: கடந்த 21/4 திகதியன்று மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நினைவுத் திருப்பலிகள் மற்றும் விசேட வேலைத்திட்டங்கள் ஆகியன ஏற்கனவே திட்டமிப்பட்டப்படி நடத்தப்படாது என கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

கொழும்பு போராயர் இல்லத்தில் இன்று (16.04.2020) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையுடன், உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியாகின்றது. அன்றைய தினம் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நினைவுத் திருப்பலிகள் மற்றும் விசேட வேலைத்திட்டங்கள் என பல்வேறு செயற்திட்டங்களை நடத்த முடிவெடுத்திருந்தோம்.
எனினும், நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலை தடுப்பதற்கு அரசாங்கம், வைத்தியர்கள், தாதியர்கள், பொலிஸார், முப்படையினர் மற்றும் சுகாதார அதிகாரிகள் என பலத்தரப்பினரும் தன்னலம் பாராது சேவையாற்றி வருகின்றனர். இவர்களின் சேவைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கான நினைவுத் திருப்பலிகள் உள்ளிட்ட எமது வேலைத்திட்டங்களை நடத்தாமலிருக்க தீர்மானித்துள்ளோம். குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக எளிதான வகையில் நினைவுத் திருப்பலிகளை தொலைக்காட்சி மற்றும் வானொலி மூலமாக, நேரடியாக பார்க்க அல்லது கேட்க முடியும். இதற்காக இலத்திரனியல் ஊடகங்களின் உதவியை எதிர்பார்க்கிறேன். இந்த குண்டுத்தாக்குதலில் கத்தோலிக்கர் மட்டுமல்ல ஏனைய மதத்தைச் சார்ந்தவர்களும் உயிரிழந்துள்ளனர். தேவாலயங்கள் மாத்திரமல்லாது தலைநகரிலுள்ள பிரதான ஹோட்டல்களிலும் குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்றன.
இந்த குண்டுத்தாக்குதலில் கத்தோலிக்கர் மட்டுமல்ல ஏனைய மதத்தைச் சார்ந்தவர்களும் உயிரிழந்துள்ளனர். தேவாலயங்கள் மாத்திரமல்லாது தலைநகரிலுள்ள பிரதான ஹோட்டல்களிலும் குண்டுத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதில் ஏனைய மதத்தைச் சார்ந்தோரும் உயிரிழந்துள்ளனர். ஆகையால், கத்தோலிக்கரான நாம் மாத்திரமல்ல, இந்த நினைவுத் தினத்தை சகல மதத்தினரும் அனுஷ்டிக்க வேண்டும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். கடந்த ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதியன்று , அதாவது உயிர்த்த ஞாயிறு தினத்தன்று முதலாவது குண்டுத்தாக்குதல் காலை 8.45 மணிக்கு மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஆகவே எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதியன்று காலை 8.45 மணிக்கு உயிரிழந்தவர்களுக்காக வீடுகளிலிருந்தவாறு 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். அன்றைய தினம் காலை 8.40 மணிக்கு கிறிஸ்தவ ஆலயங்களிலும் மணி ஓசை எழுப்புமாறு கேட்டுக்கொள்வதுடன், முடியுமானால் பௌத்த விகாரைகள், இந்துக் கோயில்கள், முஸ்லிம் பள்ளி வாசல்கள் ஆகிய
அன்றைய தினம் காலை 8.40 மணிக்கு கிறிஸ்தவ ஆலயங்களிலும் மணி ஓசை எழுப்புமாறு கேட்டுக்கொள்வதுடன், முடியுமானால் பௌத்த விகாரைகள், இந்துக் கோயில்கள், முஸ்லிம் பள்ளி வாசல்கள் ஆகிய வணக்க ஸ்தலங்களிலும் மணி ஓசை அல்லது ஏதேனும் ஓசையை எழுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், காலை 8.47 மணிக்கு மெழுகுவர்த்தி அல்லது விளக்குகளை ஏற்றி மீண்டுமொருமுறை இதுபோன்ற கொடூரச் செயல்கள் நடத்தப்படாமலிருக்க வேண்டுவோம்” என்றார்.