கொழும்பு: முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் புதிதாக இடம்பெற்று வரும் விசாரணைகளுக்கு அமைய, இக்கைது இடம்பெற்றுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

புத்தளம் பிரதேசத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜாலியா சேனரத்ன தெரிவித்தார்.
ரிஷாட் பதியுதீனுக்கு இரு சகோதரர்கள் உள்ளனர் அதில் ஒருவர் ரிப்கான் பதியுதீன் மற்றையவர் ரியாஜ் பதியுதீன் ஆவார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இடம்பெற்று வரும் புதிய விசாரணைகளுக்கு அமைய, கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன ஏற்கனவே தெரிவித்திருந்தார்.