தாய்பே: டிசம்பரில் கொரோனாவைரஸ் குறித்து எச்சரித்து உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு அனுப்பிய மின்னஞ்சல்களை தாய்வான் பகிரங்கப்படுத்தியுள்ளது. தாய்வானின் நோய் தடுப்பிற்கான நிலையம் இந்த மின்னஞ்சலை டிசம்பரில் உலக சுகாதா ஸ்தாபனத்திற்கு அனுப்பியுள்ளது. சீனாவின் வுகானில் நிமோனியா போன்ற நோயினால் ஏழு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என செய்திகள் தெரிவிப்பதாக தாய்வானின் நோய் தடுப்பிற்கான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இது சார்ஸ் இல்லை என சுகாதார அதிகாரிகள் ஊடகங்களிற்கு தெரிவித்துள்ளனர் என தாய்வானின் நோய் தடுப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட மாதிரிகள் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளன நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என தாய்வரின் அமைப்பு அந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளது. எனினும் மனிதர்களிற்கு மத்தியிலான நோய் பரவல் குறித்து தாய்வான் எச்சரிக்கைவில்வை என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

எனினும் தாங்கள் பயன்படுத்திய சொற்களை அடிப்படையாக வைத்து இது மனிதர்கள் மத்தியில்பரவக்கூடியது என்பதை சுகாதார துறையினர் கண்டுபிடித்திருக்கலாம் என தாய்வான் தெரிவித்துள்ளது. எனினும் அவ்வேளை தாய்வானில் எவரும் பாதிக்கப்படாதால் மனிதர்களிற்கு இடையிலான தொற்று குறித்து எதனையும் தெரிவிக்கும் நிலையில் இருக்கவில்லை என தாய்வான் தெரிவித்துள்ளது.