சியோல்: தென்கொரியாவில் குணமடைந்த கொரோனா
வைரஸ் நோயாளிகள் பலர் மீண்டும் உடல்நலம்
பாதிக்கப்பட்டுள்ளனர். நோயிலிருந்து மீண்டுள்ளனர் என கருதப்படும் 91 நோயாளிகள் மீண்டும்
பாதிக்கப்பட்டுள்ளனர் என தென்கொரியாவின்
நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நிலையைம்
தெரிவித்துள்ளது. குணமடைந்தவர்களிற்கு மீண்டும் நோய் எப்படி
தொற்றியது என்பதை உறுதி
செய்யமுடியவில்லை என அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.

அவர்கள் மீண்டும் தொற்றிற்குள்ளாகவில்லை
மாறாக நோயாளிகளிடம் மீண்டும் மீள்
உற்பத்தியாகியுள்ளது என செய்தியாளர்
மாநாட்டில் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
தவறானசோதனைகளும் இதற்கு
காரணமாகயிருக்கலாம் என அந்த அமைப்பு
தெரிவித்துள்ளது.
நோயினால் பாதிக்கப்பட்டு
குணமடைந்தவர்கள் இந்த நோய்க்கான நோய்
எதிர்ப்பு சக்தி உடையவர்களாக மாறுவார்கள்
என்ற கருத்து சர்வதேச அளவில் காணப்படும்
நிலையிலேயே இந்த தகவல்
வெளியாகியுள்ளது.