லண்டன்: கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இரண்டு நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜொன்சன் தற்போது மருத்துவ ரீதியாக நல்ல நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைரஸ் தொற்றுக்கு கொடுக்கப்படும் சிகிச்சைகள் அவருக்கு உதவுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

போரிஸ் ஜொன்சன் லண்டனில் உள்ள புனித தோமஸ் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நல்ல மனநிலையில் இருப்பதாக அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.