இந்தியாவில் கடந்த 12 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 355 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2902ஆக உயர்ந்திருக்கிறது. 68 பேர் உயிரிழந்துள்ளனர். 183 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவை பொறுத்தவரை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலம் மகாராஷ்டிரா. அங்கு இன்று மேலும் 47 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்ந மாநிலத்தில் மட்டும் மொத்தம் 537 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.