கொரோனா தொற்றால் உடல்நலம் மோசமாகியுள்ள நோயாளிகளுக்கு மருந்தாக கரடியின் பித்தநீரை பயன்படுத்த சீனா ஒப்புதல் வழங்கியுள்ளது. சீனாவின் தேசிய ஆணையம், கரடியின் பித்தநீர், ஆட்டின் கொம்பு மற்றும் மூலிகைகள் அடங்கிய ‘டாங்ரேகுவிங்’ ஊசியை பயன்படுத்த ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஆனால் இந்த கலவைக்கு மருத்துவ குணம் உள்ளது என்பது இன்னும் நிரூபிக்கப்படவில்லை.
சீனாவின் பாரம்பரிய மருத்துவத்தில் கரடியின் பித்தநீர் பல காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் சட்டவிரோதமாக செயல்படும சர்வதேச சந்தையில் அது அதிகவிலையில் விற்கப்படும்.
கரடியின் பித்தநீரை பயன்படுத்த ஒப்புதல் வழங்கியிருப்பது விலங்குகள் நல ஆர்வலர்கள் மத்தியில் கோபத்தை எழுப்பியுள்ளது.
மேலும் இதற்கு ஒரு வாரத்திற்கு முன்புதான் உணவுக்காக வனவிலங்குகள் விற்கப்படுவது தடை செய்யப்பட்டது. பித்தநீர் கல்லீரலில் சுரக்கும். பித்தப்பையில் சேகரிக்கப்படும்.