கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் உயிரிழந்த இரண்டாவது நபரின் நல்லடக்கம் நேற்று (30) நள்ளிரவு இடம்பெற்றது. நீர்கொழும்பு மாநகர சபைக்குச் சொந்தமான பொது மாயனத்தில் சர்வதேச தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைய இவரது இறுதிக்கிரியைகள் இடம்பெற்றன.

சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிகளின் பங்களிப்புடன் குறித்த இறுதிக்கிரியைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, இவரது இறுதிக்கிரியையில் குறிப்பிட்ட ஒரு சிலர் மாத்திரம் அனுமதிக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ளது. 

நீர்கொழும்பு, கொச்சிக்கடையைச் சேர்ந்த 64 வயதுடைய ஒருவரே கொரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த இரண்டாவது நபர் ஆவார்.

அத்தோடு குறித்த நபர் இருதய நோயினால் பாதிக்கப்பட்டவர் என்பதோடு, நீண்டநாள் சுவாசப் பிரச்சினை கொண்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக இலங்கையில் இருவர் உயிரிழந்துள்ளனர்.