இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 511-ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. ஆனால், அதில் நம்பிக்கை தரும் கதையாக அவுரங்காபாத்தில் பேராசிரியர் ஒருவர் மருத்துவ உதவியுடன் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்துள்ளார்.

அந்த பேராசிரியர் சமீபத்தில் ரஷ்யா சென்று திரும்பி வந்துள்ளார். அவர் மார்ச் மூன்றாம் தேதி கஜகஸ்தான் வழியாக இந்தியா வந்துள்ளார். டெல்லி வந்த அவர், பின் அவுரங்காபாத்திற்கு சென்றுள்ளார். மார்ச் 4ஆம் தேதி கல்லூரி பணிக்கு திரும்பியுள்ளார்.

ஆரம்பத்தில் அவருக்கு எந்த அறிகுறியும் இல்லை. எனவே தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்போம் என அவர் நினைத்துக் கூட பார்க்கவில்லை. 

ஆனால் மார்ச் 7ஆம் தேதி, அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மேலும் இருமலும் இருந்துள்ளது. சில மாத்திரகளையும், ஆரம்ப சிகிச்சைகளையும் எடுத்துள்ளார். ஆனால் அதன்பிறகும் அறிகுறிகள் இருந்துள்ளன. அதன்பிறகு இரண்டு மூன்று நாட்கள் கழித்து அவருக்கு சளி பிடித்துள்ளது. பின் அவர் அசெளகர்யமாக உணர்ந்துள்ளார். மூச்சு விடவும் சிரமப்பட்டுள்ளார். 

எனவே 13ஆம் தேதி அவுரங்காபாத்தில் உள்ள நந்தலால் தூட் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். சிடி ஸ்கேன் மற்றும் பரிசோதனைக்கு பிறகு அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்த பேராசிரியர்

கல்லூரி பணியில் தற்போது தேர்வு நேரம், என்பதால் அவர் திரும்பி வந்ததும் மாணவர்களுக்கு பரிட்சை வைத்துள்ளார். 

அந்த பேராரிசியருக்கு கொரோனா தொற்று என்று தெரிந்ததும் அவுரங்காபாத் குடியிருப்புவாசிகள் அச்சத்தில் மூழ்கினர்.

அந்த செய்தி பல வடிவங்களில் பரவியது. அந்த பேராசிரியர் பணிபுரியும் கல்லூரி தொடர்பான வாட்சப் குழுவில் வேறு யாருக்கேனும் பரவி இருக்குமோ என்றும் விவாதிக்கப்பட்டது.

சுகாதாரத்துறை அந்த ஆசிரியர்களுடன் தொடர்புடையவர்கள், மாணவர்கள் என பலருக்கும் சோதனை செய்தது. ஆனால், யாருக்கும் கொரோனா தொற்று இல்லை.

உளவியல் பதற்றம்

தனக்கு கொரோனா தொற்று உள்ளது என்று தெரியவந்ததும் முதலில் அந்த பேராசிரியர் பயந்துவிட்டார். 

“எனக்கு கொரோனா தொற்று வரும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. ரஷ்யாவிலிருந்து திரும்பி வரும்போது தொற்று எங்கு வேண்டுமானாலும் ஏற்பட்டிருக்கலாம். நான் ரஷ்யாவுக்கு பயணம் செய்தேன், எனவே அந்த சமயத்தில் எனக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை நான் ஒப்புக் கொள்ள வேண்டும்.” என்றார்.

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்த பேராசிரியர்

“எனக்கு இந்த தொற்று வர வேண்டும் என கடவுள் நினைத்திருக்கிறார். ஆனால் என்னால் பிறரும் பாதிக்கப்படுவார்கள் என்று நினைக்கும்போது வருத்தமாகவுள்ளது.”

ஆனால் மருத்துவர்கள் அவரை அமைதிப்படுத்தினர். அவரின் குடும்ப உறுப்பினர்களிடமும் கவலைக் கொள்ள வேண்டாம் என்று தெரிவித்தனர். மேலும் மாணவர்கள் மற்றும் உறவினர்களுக்கு மருத்துவர்கள் தைரியம் வழங்கினார்கள் என்கிறார் அந்த பேராசிரியர்.

`தனிமைப்படுத்துதலே முக்கியம்`

அந்த பேராசிரியர் கொரோனாவை வெற்றிகரமாக எதிர்கொண்டு விட்டதால் அவர் நாட்டில் உள்ள பலருக்கும் நம்பிக்கையளிக்ககூடியவராக உள்ளார். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் மருத்து பணியாளர்களை மக்கள் பாராட்டி வருகின்றனர். 

அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் ஹிமான்ஷி குப்தா பேசினார்.

இந்த தொற்றை கட்டுப்படுத்த தனிமைப்படுத்துதால் மிக முக்கியம் என்கிறார் அவர். உலகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகளவில் பரவி வருவதால் மார்ச் ஒன்றாம் தேதி எங்களது மருத்துவமனையில் நாங்கள் தனி வார்டை உருவாக்கினோம்.

இந்த வார்டு, மருத்துவமனையிலிருந்து வேறு இடத்தில் உள்ளது. பயிற்சி பெற்ற நபர்கள், குடிநீர் மற்றும் கழிவறை போன்ற வசதிகளை நாங்கள் அங்கு செய்துள்ளோம்.

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்த பேராசிரியர்

அந்த பேராசிரியர் மார்ச் 13ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தனி வார்டுக்கு மாற்றப்பட்டு அவரின் சிகிச்சை உடனடியாக தொடங்கியது.

உலக சுகாதார நிறுவனம் மற்றும் இந்திய மருத்து ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி, அவருக்கு ஆண்டி ரெட்ரோ வைரல் மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளன. மூன்று நாட்களாக கொடுக்கப்பட்ட மருந்துகளுக்கு அவரின் உடல் நன்றாக எதிர்வினையாற்றியது மற்றும் ஆறு நாட்களில் அவரின் உடல்நிலையில் நல்ல மாற்றமும் தெரிந்துள்ளது.

அதன்பின் இருமுறை அவருக்கு சோதனை செய்யப்பட்டது. இந்த முறை அவருக்கு கொரோனா நெகடிவ் என தெரியவந்தது

அவரின் சமீபத்திய பயண தகவல்களை அறிந்துகொண்டு அந்த பேராசிரியர் உடனடியாக தனி வார்டுக்கு மாற்றப்பட்டார். எனவே அவரின் மூலம் ஏற்படும் தொற்று தடுக்கப்பட்டது என்கிறார் அவுரங்காபாத் மாவாட்ட மருத்துவர் எஸ்.வில்.குல்கர்னி.

மருத்துவர்கள் மற்றும் பிற ஊழியர்களால், அந்த பேராசிரியர் குணமடைந்தார். மேலும் சில நாட்களுக்குள் அவருக்கு நெகடிவ் என தெரியவந்தது. தேவையான நடவடிக்கைகளை ஊழியர்கள் உடனடியான எடுத்தனர் என்கிறார் குல்கர்னி.

குடிமக்களும் இதை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். பலர் தாங்கள் வெளிநாட்டிலிருந்து பயணம் செய்த்த்தை மறைக்கின்றனர். அவர்கள் இவ்வாறு செய்யக்கூடாது. அவ்வாறனவர்கள் தங்களை தானே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். அப்போதுதான் வைரஸ் தொற்று பரவலை தடுக்க முடியும்.

மருத்துவமனையிலிருந்து வெளிவந்த பிறகும் கவனம் தேவை

கடந்த இரண்டு நாட்களாக பேராசிரியரின் உடல்நலம் நன்றாக தேரிவருகிறது. அடுத்த சில தினங்களில் அவர் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்படுவார் என்கிறார் குப்தா.

அந்த பேராசிரியருக்கு தற்போது கொரோனா இல்லை. இருப்பினும் பாதுகாப்பு நடவடிக்கையாக அவரை சில தினங்களுக்கு வீட்டிற்குள்ளேயே இருக்கும்படி கூறியிருக்கிறோம்.

அடுத்த 10-15 நாட்களுக்கு அவர் வீட்டிலேயே தங்க வேண்டும். அவரின் உடல்நலம் மற்றும் அறிகுறிகள் குறித்து ஆராயப்படும். கொரோனா நெகடிவ் என்று ஆன பின் அவரால் பிறருக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட வேறு யாருடனாவது அவர்கள் தொடர்பு கொண்டாலோ மீண்டும் தொற்று வர வாய்ப்புகள் அதிகம்

தற்போதைய சூழலில் கொரோனா தொற்று பரவுவதை தடுப்பது நமது பொறுப்பாகும். எனவே உங்களுக்கு தொற்று இல்லையென்றாலும் கூட்டத்துடன் சேராமல் தள்ளியே இருக்க வேண்டும்.

உலக சுகாதார அமைப்பின் தகவல்படி கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் குணமாகி வீட்டிற்கு திரும்பியுள்ளனர். எனவே உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும்கூட அதுகுறித்து கவலைப்பட வேண்டாம்.

உலகம் முழுவதும் இதுவரை ஏற்பட்ட தொற்று நோய்களை பார்க்கும்போது இந்த கொரோனா தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகள் மிகவும் குறைவே. இதனால் ஏற்படும் இறப்பு விகிதம் மூன்று சதவீதம். 

ஒருபுறம் கொரோனா தொற்று குறித்த அச்சம் உலகெங்கும் பரவி இருந்தாலும் அதிலிருந்து மீண்டு வந்தவரின் கதையை கேட்கும்போது நமக்கு நம்பிக்கையை அளிக்கிறது.