
கொழும்பு: பொதுத் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி நடாத்தப்படமாட்டாது என அறவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக, ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறவிருந்த பொதுத் தேர்தலை எந்த காரணத்திற்காகவும் நடத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு இன்று நண்பகலுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பரவும் அபாயம் கருதி தேர்தல்கள் ஆணைக்குழு இம்முடிவை எடுத்தள்ளதாக, அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.