“பாயசம் வைக்கவேணும் பானையிலோ அரிசி இல்லை. முற்றிய நெற்கதிரே அரிசி கொஞ்சம் தருவாயோ?”
இதற்கு நெற்கதிர்
“நானெப்படித்தர முடியும்? என்னை வளர்க்கும் வயலிடம் போய்க் கேள்” என்றது… வயலிடம் போன எலியார்

“பாயசம் வைக்கவேணும் பானையிலோ அரிசியில்லை முற்றிய நெற்கதிரே நெல்லை வளர்த்த வயலே கொஞசம் அரிசி தருவாயா?” என்று கேட்டது அதற்கு வயல் “நானெப்படி தர முடியும் என்னை ஈரமாக்கி உதவும் நீரைப் போய்க் கேள்.. “என்றது நீரிடம் போன எலியார்
“பாயசம் வைக்க வேணும் பானையிலோ அரிசியில்லை முற்றிய நெற்கதிரே நெல்லைவளர்த்த வயலே வயலில் பாய்ந்த நீரே கொஞ்சம் அரிசி தருவாயோ” என்றது.
அதற்கு வயல் “நானெப்படித் தரமுடியும் என்னை வரம்பு கட்டி இங்கே பாய விட்ட உழவனைப் போய்க் கேள்” என்றது.
.உழவனிடம் போன எலியார்
“பாயசம் வைக்க வேணும் பானையிலோ அரிசியில்லை முற்றிய நெற்கதிரே கதிரைவளர்த்த வயலே வயலை நனைத்த நீரே நீரைப்பாய்ச்சிய உழவா கொஞ்சம் அரிசி தருவாயோ?”
ஊருக்குள் ஒற்றுமையில்லாத்தால் இப்படி ஒரு பரிதாபகமான ஓர் நிலைக்கு “ஊருக்கொரு எம்.பி ஓடிக்கொண்டிருப்பது வியப்பளிப்பதாக மக்கள் பேசிக்கொள்கின்றனர்.
இந்த நாட்டார் பாடல், உழவன் எலியாருக்கு அரசி வழங்கியதுடன் நிறைவுபெறும்.
காலையும், மாலையைம் ஊர்விட்டு ஊர்பெயர்ந்து ஊரூக்கொரு எம்.பி இரகசியச் சந்திப்பக்கள் இடம்பெற்று வருகிறது.
அரிசி வழங்கும் அந்த உழவன் யாராக இருப்பார் என ஊர்மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்!
(இது அனைத்து தேர்தல் காலங்களுக்கு மட்டும்)