கொழும்பு: கொரோனா வைரஸ் தொற்று அச்சம் உலகம் முழுவதும் பரவி இருக்கும் சூழலில், சீனாவிலிருந்து வருகைத் தரும் சீன பிரஜைகள் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான பரிசோதனை மத்திய நிலையங்களுக்கு அனுப்பப்படாமை குறித்து இலங்கையில் தற்போது அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது.
தென்கொரியா, ஈரான் மற்றும் இத்தாலி ஆகிய மூன்று நாடுகளிலிருந்து வருகைத் தரும் பயணிகள் மட்டுமே இலங்கையில் 14 நாட்கள் கொரோனா தொற்று தொடர்பான பரிசோதனை நிலையங்களுக்கு கடந்த காலங்களில் அனுப்பப்பட்டிருந்தனர்.
இதன்பிரகாரம், சீனாவை முழுமையாக ஆராயும் போது இறுதியாக 20ற்கும் குறைவான நோயாளர்களே இந்த வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
சீனா, கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர ஆரம்பத்ததிலிருந்து மிக வெற்றிகரமாக செயற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், சுகாதார அபாயகர நிலைமையை ஆராயும் நடைமுறையின் பிரகாரம், சீன பிரஜையொருவரிடமிருந்து இந்த வைரஸ் தொற்று இலங்கையர் ஒருவருக்கு பரவும் அபாயம் தற்போது மிகவும் குறைவடைந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக டாக்டர் அனில் ஜயசிங்க கூறுகின்றார்.
இதனாலேயே, சீன நாட்டு பிரஜைகள், கொரோனா தொற்று தொடர்பில் ஆராயும் மத்திய நிலையங்களுக்கு அனுப்பப்படாது, ஏனைய அபாயகர நிலைமையிலுள்ள மூன்று நாடுகளை சேர்ந்தவர்கள் மாத்திரம் அந்த இடத்திற்கு அனுப்பப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.