ஜேர்மனியின் சனத்தொகையில் 70 வீதமானவர்கள் பாதிக்கப்படலாம் எனஜேர்மனியின் சான்சிலர் அஞ்சலா மேர்கல் தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சருடன் இணைந்து நடத்திய செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரசினை குணப்படுத்துவதற்கான வழிவகை எதுவும் இல்லாததன் காரணமாக வைரஸ் பரவுவம் வேகத்தை குறைப்பது குறித்தே கவனம் செலுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

காலத்துடன் போட்டிபோட்டு வெல்வதை பற்றியது இது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜேர்மனியில் மூன்றாவது நபர் கொரோனா வைரசினால் பலியாகியுள்ள நிலையிலேயே இந்த எச்சரிக்கை அறிவிப்புவெளியாகியுள்ளது.