நீர்கொழும்பு பெரியமுல்ல பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் இன்று சற்றுமுன்னர் ஏற்பட்ட தாக்குதல் சம்பவத்தில் ஹோட்டல் பணியாளர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

ஹோட்டல் உரிமையாளர் உட்பட மேலும் இருவர் வெட்டுக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் மதுபானம் அருந்த அனுமதி இருப்பதால் தங்களை ஹோட்டலினுள் மதுபானம் அருந்த அனுமதிக்குமாறு தகராறு செய்துள்ளனர்.

எனினும் ஹோட்டல் உரிமையாளர் மற்றும் பணியாளர் இங்கு மதுபானம் அருந்த வேண்டாமென மன்றாடியுள்ளனர்.

இதன்போது வேனில் வந்தவர்களால் ஹோட்டல் பணியாளர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் குறித்த இடத்தில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு வருகிறது.

Shamil Ahamed