கண்டி: இலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையிலான இருபதுக்கு : 20 தொடரின் முதல் போட்டியானது இன்றைய தினம் கண்டி பல்லேகல மைதானைத்தில் ஆரம்பமானது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத்தீவுகள் அணியானது முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து ஓட்டங்களை குவித்தது.

மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பில் சிம்மன்ஸ் பந்துகளில் ஆட்டமிழக்காமல் 67 ஓட்டங்களை குவித்தார் இதன் பின்னர் 197 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களுள்
ஒருவராக அவிஷ்க பெர்னாண்டோ 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் செஹான் ஜயசூரிய மற்றும் குசல் மெண்டீஸ் ஆகியோர் டக்கவுட்டுடன் வெளியேறினர். தொடர்ந்து களமிறங்கிய மெத்தியூஸ் 10 ஓட்டங்களுடனும், தசூன் சானக்க இரண்டு ஓட்டங்களுடனும் முறையே ஆட்டமிழந்து வெளியேறினர் இதனால் இலங்கை அணியானது 6 ஓவரில் 5 விக்கெட்டுக்களை இழந்து 56 ஓட்டங்களை மாத்திரம் பெற்று நிலைகுலைந்தது.
எனினும் 6 ஆவது விக்கெட்டுக்காக ஆரம்ப வீரராக களமிறங்கிய குசல் பெரேராவுடன் ஹசரங்க ஜோடி சேர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்
அதனால் இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கையானது விக்கெட் இழப்பின்றி அதிகரிக்க ஆரம்பித்தது. அதன்படி முதல் 10 ஓவர்களில் இலங்கை அணி 95 ஓட்டங்களையும், 15 ஓவரில் 141 ஓட்டாங்களை குவித்தது.
இந் நிலையில் 15.3 ஆவது ஓவரில் ஹசரங்க 44 ஓட்டங்களுடன் ரோவ்மன் பவுலின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேற மைதானம் மெளனத்தில் ஆழ்ந்தது இருந்தபோதும் திசர பெரேராவுடன் கைகோர்த்த குசல் பெரேரா தனது அதிரடியை தொடர்ந்தும் வெளிப்படுத்த 16.2 ஆவது ஓவரில் இலங்கை அணி 150 ஓட்டங்களை கடந்தது எனினும் 16.3 ஆவது ஓவரில் குசல் பெரேரா மொத்தமாக 38 பந்துகளை எதிர்கொண்டு 3 சிக்ஸர்கள் 6 பவுண்டரிகள் அடங்கலாக 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இதனால் இலங்கை அணி 151 ஓட்டாங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்தது. தொடர்ந்து இசுறு உதான களமிறங்கி துடுப்பெடுத்தாட 17 ஆவது ஓவரில் இலங்கை அணி 153 ஓட்டாங்களை மாத்திரம் பெற்றது ஒரு கட்டத்தில் இலங்கையின் வெற்றிக்கு 18 பந்துகளில் 44 ஓட்டம் என்ற நிலையிருந்தது இருந்தபோதும் இலங்கை அணி 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 171 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 25 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது