உயிர்த்த ஞாயிறு 21/4 தாக்குதலின் பின்னர் தேசிய தௌஹீத்ஜமாஅத் அமைப்புடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 61 பேரின் விளக்கமறியல் எதிர்வரும் பெப்ரவரி 25ஆம்திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. நுவரெலியாவில் உள்ள தேசிய தௌஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் ஸஹ்ரானிடம் ஆயுதப்பயிற்சி பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட காத்தான்குடியை சேர்ந்தவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.