லண்டன்: பிரிட்டனில், தேசிய சுகாதார சேவை, சிறுநீர் கழிப்பதில் சிக்கல் உள்ள ஆண்கள், அமைதியான இடத்தில் அமர்ந்தபடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அமர்ந்தபடி சிறுநீர் கழித்தால், அது பிராஸ்டேட் புற்றுநோயை தடுக்கும் என்றும், அது மனிதரின் பாலியல் வாழ்க்கையை மேம்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2012ஆம் ஆண்டு ஸ்வீடனில் அரசியல்வாதி ஒருவர் பொது கழிப்பிடங்களில் ஆண்கள் உட்கார்ந்து கொண்டு சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற விவாதத்தை முன் வைத்தார். அதிலிருந்து பல ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாக ஜெர்மனியில் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.
கழிவறைகளில் உட்கார்ந்து சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற பச்சை நிற குறியீடும், நின்று சிறுநீர் கழிக்க கூடாது என சிவப்பு நிற குறியீடும் வைக்கப்பட்டுள்ளது.