கொழும்பு நகரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்காக காலி முகத்திடலுக்கு அருகில் இடமொன்று ஒதுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள இவ்விடம் தொடர்பாக இதுவரையில் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. குறித்த பகுதி இதற்கு முன்னார் ஜனாதிபதி செயலக வாகன தரிப்பிடப்பிடமாக பயன்படுத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.