லண்டன்: லண்டனில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த “பயங்கரவாதம் தொடர்பான” சம்பவத்தில் ஒரு நபர் ஆயுதமேந்திய அதிகாரிகளால் சுடப்பட்டதாக அந்நகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். லண்டனிலுள்ள ஸ்ட்ரதம் ஹை ரோட் எனும் பகுதியில் நடந்த இந்த துப்பாக்கிச்சூட்டிற்கு முன்னர், ஒன்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தாக்குதலாளியால் கத்தியால் குத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.

நிலைமை கட்டுக்குள் வரும்வரை இந்த பகுதிக்குள் நுழைவதை தவிர்க்குமாறு லண்டன் நகர காவல்துறையினர் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
“