கொழும்பு: சீனாவிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கான வருகை தரு வீசா (On arrival visas) உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்படுவதாக, அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி அறிவித்துள்ளார்.

சீனாவிலிருந்து வருகை தருவோருக்கு ஒன்லைன் முறை மூலம் வீசாவுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.