சாய்ந்தமருது தைபா அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவிகள் அனுமதி

– அஸ்லம் எஸ்.மௌலானா

சாய்ந்தமருது: சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவிகளை சேர்த்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை இம்மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. அன்றைய தினம முற்பகல் 9.00 மணி தொடக்கம் பிற்பகல் 2.00 மணி வரை சாய்ந்தமருது பொலிவேரியன் நகரில் அமைந்துள்ள கல்லூரியின் நிர்வாக காரியாலயத்தில் இந்நேர்முகப் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

இம்முறை ஜீ.சி.ஈ.சாதாரண தரப் பரீட்சை எழுதிய அல்-குர்ஆனை சரளமாக ஓதத் தெரிந்த மாணவிகள் அன்றைய தினம் உரிய ஆவணங்களுடன் நேர்முகப் பரீட்சைக்கு சமூகமளிக்க முடியும் என கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக விபரம் தேவைப்படுவோர் 0672055344 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர். 

இக்கல்லூரியில் மௌலவியா பட்டத்திற்கான இஸ்லாமிய மார்க்கக் கல்வி பாதிக்கப்படுவதுடன் அல்-ஆலிம் மற்றும் ஜீ.சி.ஈ. உயர் தரப் பரீட்சைகளுக்கு மாணவிகள் தயார்படுத்தப்படுகின்றனர். இங்கு பயிலும் மாணவிகள் மூன்றாம் வருடத்தில் ஜீ.சி.ஈ. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதுடன் நான்காம் வருடத்தில் அல்ஆலிம் பரீட்சைக்கு தோற்றி மௌலவியாக்களாக பட்டம் பெற்று வெளியேறுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்..

கடந்த காலங்களில் இக்கல்லூரியில் இருந்து ஜீ.சி.ஈ. உயர் தரப் பரீட்சைக்கு தோற்றிய பெரும்பாலான மாணவிகள் எல்லா பாடங்களிலும் சித்தியடைந்து, பல்கலைக்கழக அனுமதி பெற்று, உயர்கல்வி கற்று வருகின்றனர். அத்துடன் அரசாங்க பரீட்சைத் திணைக்களத்தின் அல்ஆலிம் பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவிகளும் சித்தியடைந்திருப்பதுடன் இதுவரை 09 மாணவிகள் மௌலவியா பட்டம் பெற்று வெளியேறியுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s