முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தை இரத்து செய்வதற்கான திருத்த சட்டத்தை நீக்குவது தொடர்பில் அத்துரலிய ரத்தன தேரர் எம்.பியினால் இரு திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. 1951ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தை நீக்குதல் மற்றும் திருமண கட்டளைச் சட்டத்தை திருத்துதல் ஆகிய இரு திருத்தங்களை அவர் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கை பிரகடனம் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் இரண்டாவது நாளாக தற்போது பாராளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இன்று (08) பாராளுமன்றத்தில் அவர் இதனை சமர்ப்பித்தார்.