தலைவரும் பிரதமர் வேட்பாளரும் சஜித் பிரேமதாஸவே

கொழும்பு: ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவராக சஜித் பிரேமதாஸவை நியமிக்கவும், எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக சஜித் பிரேமதாஸவை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று (30) இடம்பெற்ற ஐ.தே.க.வின் செயற்குழு கூட்டத்தில் இவ்வாறு முடிவு செய்யப்பட்டுள்ளதாக, அக்கட்சியின் செயலாளர் நாயகம் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

Read the rest of this entry »

‘இலங்கை மக்கள் முகமூடி அணியத் தேவையில்லை’ – அமைச்சர் பந்துல

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள முகமூடி அணிய வேண்டிய நிலை, தற்போது இலங்கையில் இல்லை என்று, தேசிய தொற்று நோயியல் பிரிவைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »

சீன சுற்றுலா பயணிகளுக்கு வீசா இடைநிறுத்தம்

கொழும்பு: சீனாவிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கான வருகை தரு வீசா (On arrival visas) உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்படுவதாக, அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி அறிவித்துள்ளார்.

Read the rest of this entry »

8 தமிழர்களை கழுத்தறுத்து கொன்றவர் பொது மன்னிப்பில் விடுதலை!

கொழும்பு: மிருசுவில் பிரதேசத்தில் தமிழர்கள் எட்டுப் பேரை கழுத்தை அறுத்து படுகொலை செய்த குற்றத்துக்காக மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் ராணுவ சார்ஜன்ட் ஒருவர், ஜனாதிபதி வழங்கிய பொதுமன்னிப்புக்கு இணங்க அண்மையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இது தமிழ் மக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை போன்று அமைந்துள்ளதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. சிறிநேசன் நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

Read the rest of this entry »

நவமணியின் ரழமான்பரிசு மழைபரிசளிப்பு நிகழ்வு இன்று: வெற்றியாளர்கள் விபரங்கள் இணைப்பு

⁃ எஸ்.எஸ்.எம்.ஸாகிர்

நவமணிப் பத்திரிகை ஜம்இய்யத்துஷ் ஷபாப் உடன் இணைந்து 06 ஆவது முறையாக நடாத்திய ரமழான் பரிசு மழை 2018 இன் பரிசளிப்பு விழா நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (24) பிற்பகல் 3.30 மணிக்கு மருதானையில் அமைந்துள்ள ஜம்இய்யத்துஷ் – ஷபாப் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

Read the rest of this entry »

கல்லடி பாலத்திற்கு அருகாமையில் உள்ள விளம்பரப் பதாகையை அகற்ற ஷிப்லி பாறூக் கடிதம்

எம்.ரீ. ஹைதர் அலி

மட்டக்களப்பு: கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத் துறையினை மேம்படுத்தும் முகமாக மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகாமையில் விளம்பரப் பதாகை ஒன்று கிழக்கு மாகாண சுற்றுலாத் துறை பணியகத்தினூடாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை பல்லின சமூகங்கள் மிக உயர்ந்த பண்பாடுகளுடனும் தமக்கான பிரத்தியேக கலாச்சாரத்தையும் ஒழுக்க ரீதியான உயர்ந்த கோட்பாடுகளை கொண்ட நாடாகும்.
அந்த வகையில் அரசாங்கம் என்பது இவைகளை பாதுகாத்து தமது முன்னெடுப்புக்களை செய்ய வேண்டிய கடமைப்பாட்டில் உள்ள மிகப்பெரிய நிறுவனமாகும்.

Read the rest of this entry »