சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்னவை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதிவான் ஆர்.பி. நெலும்தெனிய பிறப்பித்த உத்தரவுக்கு அமைய இன்றைய தினம் அவரை கைதுசெய்ய விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி கொழும்பு 07 இல் அமைந்துள்ள ராஜித சேனாரத்னவின் இல்லாத்தில் குற்றப் புலனாய்வுப்  பிரிவினரும், பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் இந்த தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

இவர்களின் இந்த தேடுதல் நடவடிக்கையில் பொலிஸ் விசேட அதிரடிப் படையின் குண்டு செயலிழக்க செய்யும் பிரிவினரும் இணைந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை நேற்றைய தினமும் ராஜித்தவின் வீடு, அவர் மறைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் மேலும் சில இடங்களையும் சோதனைக்குட்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.