இறுதி யுத்தத்தில் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டுள்ளதாக கூறுகின்றார்கள். நீங்கள் மட்டும் சென்று உறுதிப்படுத்தி கூறினால் மட்டுமே நான் நம்புவேன் என அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ என்னிடம் கூறினார். நான் அவ்வாறு நடந்திருக்கக்கூடாது என நினைத்து களத்துக்குச் சென்றேன். அங்கு சென்று பார்த்தேன் அவர் தான். ஆனால் அதனைக்கூட எங்களுடையவர்கள் உரிமை கோருகின்றார்கள் இல்லையே.
அவர் வருவார், அவர் வருவார் என அவரை வெளிநாட்டில் விற்றுக்கொண்டே இருக்கின்றார்கள். அவர் செய்தது ஒரு வீரத்தியாகம். இன்று நாங்கள் சுபாஸ் சந்திரபோஸ் அவர்களை எப்படி பாராட்டுகின்றோம். ஆனால் இன்னும் இவரை நாங்கள் மாவீரர் பட்டியலில் சேர்க்கவில்லை. சேர்த்தால் அது ஒரு வரலாறு.
நேற்று முளைத்த அரசியல் தலைவர் ஒருவரை மேடையில் வைத்து ஒருவர் பேசுகின்றார் எங்களுடைய அண்ணன் தேசியத் தலைவர் இங்கு இருக்கின்றார். தமிழ்த் தலைவன் என உரை போகின்றது.
ஆனால் அவர் அரசியலுக்கு வந்து மூன்று வருடங்களும் இல்லை. உலகத்திலேயே தமிழனுக்கு ஒரே ஒரு தேசியத் தலைவன். அதுதான் தலைவர் பிரபாகரன். வாறவன் போறவன் எல் லாம் தலைவனாகிட முடியுமா? தேசி யத் தலைவருடன் நான் 30 வருடங்கள் இருந்துள்ளேன்.
எனவே அன்றைய போராட்டங்களை இன்றைய காலகட்டத்தில் அரசியல் வடிவத்தில் கொண்டு செல்ல வேண்டிய நிலையில் உள்ளோம். மாற்றம் ஒன்றை உருவாக்க வேண் டும். நேரத்துக்கு நேரம் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு தமிழ் மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றது. அதற்கு பின்னால் நாங்கள் ஓடத் தொடங்கினோம் என்றால் பிழைத்து விடும்.
எனவே மக்களாகிய நீங்கள் நிதானமாகவும், கவனமாகவும் சிந்தியுங்கள். நாங்களும் தமிழ் ஐக்கிய சுதந்திர முன்னணி என்கின்ற கட்சியை தொடங்கினோம்.
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சுமார் 70 பேர் உட்பட உறுப்பினர்கள் பலர் இருக்கின்றார்கள். இக்கட்சியை வடக்கு, கிழக்கு ரீதியாக வளர்க்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.