ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட 33 வேட்பாளர்களின் கட்டுப்பணம் அரசுடமையாகப்பட்டுள்ளதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.16 ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் மொத்த வாக்குகளில் குறைந்த பட்சம் 12.5 சதவீத வாக்குகளை பெறத்தவறிய வேட்பாளர்களின் கட்டுப்பணமே இவ்வாறு அரசுடமையாக்கப்பட்டுள்ளது.
கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய இரு வேட்பாளர்கள் மாத்திரமே 12.5 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றனர்.
அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 20 வேட்பாளர்கள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டனர், பதினைந்து சுயாதீன வேட்பாளர்களும் இத் தேர்தலில் போட்டியிட்டனர்.
அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர்கள் 50 ஆயிரம் ரூபா வைப்புத்தொகையும், ஒரு சுயாதீன வேட்பாளர் 75 ஆயிரம் ரூபா வைப்புத்தொகையும் செலுத்தி தேர்தலில் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.