தேர்தல் கடமையில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் 50 பேர், உணவு ஒவ்வாமை காரணமாக தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன. கொழும்பு ரோயல் கல்லூரியில் தேர்தல் கடமையில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் 50 பேரே உணவு ஒவ்வாமையால் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அத்தகவல்கள் தெரிவித்துள்ளன.
