
- AK-48
காத்தான்குடி: வேடிக்கையும் விநோதமும் நிறைந்த காத்தான்குடி தேர்தல் மேடைகள் உட்பட அகில இலங்கையிலும் தேர்தல் மேடைகள் ஓய்வெடுக்கின்றன. காத்தான்குடியில் ஹிஸ்புல்லாஹ் தரப்பும், சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் கூட்டணியுமே இம்முறை இரு துருவங்களாகச்செயற்பட்டடிருந்தன.
வழமையாக அபிவிருத்தியை மையமாகக்கொண்டமையும் ஹிஸ்புல்லாஹ்வின் தேர்தல் மேடைகள் என்றைக்கும் மாற்றமாக சமுதாய உச்சரிப்புக்களாகவே காணப்பட்டன.
தான் கோட்டபாயவின் முகவர் என்பதை ஹிஸ்புல்லாஹ் இறுதிவரை மறுக்கவில்லை.
ஹிஸ்புல்லாஹ்வின் மேடையில் பேசிய ‘சில்லறை’ பேச்சாளர்கள் அதிகமாக சஜித் பிரேமதாசவையும், ஐ.தே.க. யையும் தூற்றிப் பேசினர்.
மஸ்ஜிதுல் அக்ஷா இன்றைக்கோ நாளைக்கோ திறக்கப்படலாம் என்றிந்த மக்கள் எதிர்பார்ப்பு நனவாகவில்லை. இப்போதைக்கு அக்ஷாவை திறந்தால் காத்தான்குடி வேறாகிவிடும். பல சவால்களைச் சந்திக்கவிருககும் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின்போது அக்ஷா திறக்கப்படும்.
தனது உலமாக்கள், அறிஞர்கள் யார் என்பதையும் தனது சிவில் சமூகத்தையும் ஹிஸ்புல்லாஹ் தெரியப்படுத்தவில்லை. மக்களுக்கே அது புரிந்துவிட்டது.
இரவு பகலாக வாக்குகளைக் கலைத்திட என்றுமில்லாதவாறு ஹிஸ்புல்லாஹ் அதிகப்பிரயத்தனத்தை மேற்கொண்டிருந்தார்.
தனது பேச்சில் மாஷாஅல்லாஹ்வை அதிகமாகச் சேர்த்துக்கொண்டார்.
அளவுக்கதிகமான பணம் வீசப்பட்டிருக்கிறது. கைதிகளை மீட்க தனக்கு வாக்களிக்கும் குடும்பத்தினர்களுக்கு வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
மறைந்த அஷ்ரப் சந்திரிக்காவுடன் தனியறையில் மேற்கொண்ட ஒப்பந்தத்தில் இருந்து இன்றுவரை முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆயிரக்கணக்கன ஒப்பந்தங்களைச் செய்துள்ளார்கள். அந்த ஒப்பந்தங்களில் ஹிஸ்புல்லாஹ்வும் ஒருவரே.
அன்றிலிருந்து இன்றுவரை எவரும் தான் செய்துகொண்ட ஒப்பந்தங்களை பொதுமக்களுக்குத் தெரிவிப்பதில்லை.
1989 தேர்தல் காலம்போல் நரைமுடியில்லா, நரை தாடியில்லா இளைஞனாக ஹிஸ்புல்லாஹ் இந்த ஜனாதிபதித் தேர்தல் குதித்திருக்கிறார்.
கலிமாச்சொன்ன எனக்கு முதலில் வாக்களியுங்கள். அதன்பின்னர் கலிமாச்சொல்லாத இருவரில் ஒருவருக்கு உங்களின் வாக்கை அளியுங்கள் – எவருக்கு என்றாலும் வாக்களிங்கள் என்று ஹிஸ்புல்லாஹ்வின் தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வருகிறது.
பலம்: மகிந்த அணி
பலவீனம்: அரசியல் இருப்பு

சஜித்தை ஆதரிக்கும் கூட்டணியில் இம்முறை முஸ்லிம் காங்கிரஸூம், ஐ.தே.க.யும் அதிகமாக இணைந்திருந்தனர்.
விடுமுறை அரசியல் செய்யும் நல்லாட்சிக்காரங்க இம்முறை ஒதுங்கி இருக்காங்க. 6000 இற்கும் அதிகமான வாக்கு வங்கிகளுடன் காத்தான்குடியில் கால்பதித்த நல்லாட்சிக்கட்சிக்கு இன்றைக்கு 600 வாக்குகளும் இல்லாத வங்குரோத்து நிலைக்கு அக்கட்சி சென்றுவிட்டது.
ஹகீமின் வேண்டுகோளின்படி சிப்லி மேடையேறி சஜித்துக்காக குரல்கொடுக்கிறார். ஹிஸ்புல்லாஹ்வை கிழிக்கிறார். இவருடன் ‘முன்னாள்’ பிரமுகர்களும் பேசிக்கொண்டு சென்றது நகைப்பேற்றியது.
முஸ்லிம்கள் பாதிக்கப்பட்ட நேரங்களில் குரல்கொடுக்காத ஹகீம், தனது அரசியல் இருப்புக்காக சஜித்தை ஆதரிக்கிறார்.
இலங்கை அரசியலில் சமூகத்துக்கு எதுவும் செய்யாத இரு முஸ்லிம் பிரமுகர்களுக்கு இரு அமைச்சுக்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது எழுதப்படாத சட்டம். அதில் ஒருவர் ஹகீம். மற்றையவர் ரிஷாட்.
சஜித் வென்றாலும், கோட்டா வென்றாலும் இவர்கள் இருவரும் கெபினட் அமைச்சர்களே. இவர்களுக்குப் பின்னர்தான் ஏனைய வடகிழக்கு முஸ்லிம் அரசியல் பிரமுகர்களை இரு பெரும் கட்சிகளும் நோக்கும்.
காத்தான்குடி மக்களுக்காக எப்போதும் குரல்கொடுக்காத மௌலானாவும், ஹபீஸூம் தேர்தல் காலங்களில் காத்தான்குடிக்கு வந்து இறுதி நேரத்தில் முழங்கிவிட்டுப்போவது கெட்டித்தனமாகாது.
“முன்னாள் ஈனா அவர்களே, முன்னாள் சூனா அவர்களே, முன்னாள் கூனா அவர்களே ….. ” என்று ஒவ்வொரு பேச்சாளரும் இழுத்துக்கொண்டு போனதால் இறுதியில் கூட்டணிப்பிரமுகர்களுக்கு நேரம் போதாமல் போய்விட்டது.
சஜித்துக்காக சிப்லி அழுதார்.
பலம்: ஹகீம்
பலவீனம்: கட்சி
சஹ்ரானுக்குப்பின்னர் திரை போடும் படலம் மீண்டும் இரு தேர்தல் மேடைகளில் அலங்கரிக்கப்பட்டது.
பெருநாள் இரவு போல், 27ம் இரவுபோல ஊர் இருப்பதாக பெருமைப்படும் நிலைக்கு வெட்டிப்பயல்களாக ஆகிவிட்டோம்.