தான் ஜனாதிபதியாகத் தெரிவானதன் பின்னர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறுபவரையே பிரதமராகத் தெரிவு செய்வேன் எனத் தெரிவித்த புதிய ஜனநாயக தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, தனது அமைச்சரவைக்கு ஊழல் மோசடி தொடர்பில் குற்றச்சாட்டுக்களுடைய எவரையும் நியமிக்கப் போவதில்லலை என்றும் கூறினார்.

சஜித் பிரேமதாச இன்றைய தினம் நாட்டு மக்களுக்கு வழங்கிய விஷேட உரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டவுடன் ஊழல் மோசடிகாரர்களுக்கும், போதைக் பொருள் விற்பனையாளர்களுக்கும் , மத அடிப்படைவாதிகளுக்கும் எவ்வித மன்னிப்பும் இன்றி சட்டத்தை நடைமுறைப்படுத்துவேன். நாட்டிலுள்ள அரசியல்வாதிகளுக்கு வாகன அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொடுத்தல் மற்றும் பாதுகாப்பு வழங்கும் பிரபுக்கள் அரசியல் முறைமையை முழுமையாக இல்லதொழிப்பேன் என்று உறுதியளிக்கிறேன்.
ஒப்பந்தம் செய்பவர்களுக்கும், அடிப்படைவாதிகளுடனும் பாதாள உலகக் குழுவினருடன் தொடர்பைப் பேணுபவர்களுக்கும் அரசியல் ரீதியான ஒத்துழைப்பு கிடைக்ப் பெறுகின்றமையை அறிவேன். இந்த முறைமைகளை மாற்றியமைப்பதற்கு இளம் , நிபுணத்துவம் மிக்கவர்களுடன் இணைந்து நேரடியாக செயற்பட தயாராக இருக்கின்றேன்.
அத்தோடு பாராளுமன்ற வரையரைக்குள் மாத்திரமல்லாது மக்கள் ஆணையுடன் புதிய அரசியலமைப்பு நடவடிக்கைகள் பாராளுமன்றத்திலும் மக்கள் மத்தியிலும் முன்னெடுக்கப்படுப்பதற்கு பாடுபடுவேன். மக்களின் விருப்பம் இன்றி அதனை ஒருபோதும் நடைமுறைப்படுத்த மாட்டேன். மக்களின் ஆசீர்வாதத்துடன் புதிய நாட்டை கட்டியெழுப்ப முன்னோக்கிச் செல்ல இணைந்து பயணிப்பதற்கு அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாகவும் இதன்போது அவர் கூறினார்.