அல்பக்தாதியை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்ட நாயின் படத்தினை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். பெல்ஜியன் மலினொய்ஸ் இனத்தை சேர்ந்த அந்த நாய் பக்தாதி தன்னை வெடிக்கவைத்த வேளை காயமடைந்துள்ளது.
நாயின் படத்தை வெளியிட்டுள்ளேன் ஆனால் அதன் பெயரை வெளியிடப்போவதில்லை என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஐஎஸ் தலைவரை கண்டுபிடிப்பதற்கும் கொல்வதற்கும் உதவிய அற்புதமான நாயின் படத்தை பகிரங்கப்படுத்த தீர்மானித்துள்ளோம் பெயரை வெளியிடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை பக்தாதியை கொல்லப்பட்டதை உறுதி செய்தவேளை குறிப்பிட்ட நாயை பாராட்டியிருந்ததுடன் அது பக்தாதியை அவர் தன்னை வெடிக்கவைக்கும் வரை துரத்திசென்றது என குறிப்பிட்டிருந்தார்.
அமெரிக்க இராணுவத்தினர் வழமையாக பெல்ஜியன் மலினொய்ஸ் இன நாய்களையே பயன்படுத்துவது வழமை.
இந்த வகை நாய்கள் படையினரை பாதுகாப்பது மற்றும் வழிநடத்துவதிலும், எதிரிகளையும் வெடிமருந்துகளையும் கண்டுபிடிப்பதிலும் திறமையானவை.