நேரடி தொலைக்காட்சி விவாதத்திற்கு வருமாறு பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபயவிற்கு சஜித் பிரேமதாச சவால் விடுத்துள்ளார். புதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக ஒரு நேரடி தொலைக்காட்சி விவாதத்திற்கு பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு சவால் விடுத்துள்ளார்.

இது குறித்து சஜித் பிரேமதாச தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

நான் கோத்தாபய ராஜபக்ஷவை தொலைக்காட்டியொன்றில் நேரடி விவாதத்திற்கு அழைக்கின்றேன்.  அதனால் அச்சமின்றி வாக்காளர்கள் எமது கொள்கைகளையும் இலக்குகளையும் தெளிவாக புரிந்துகொள்ள முடியும்.

அத்துடன் ஒரு வலுவான ஜனாதிபதி வேட்பாளர் தனது எதிர் வேட்பாளருடன் முன்கூட்டியே திட்டமிட்டு தயாரிக்கப்படாத  கருத்துக்களை பகிர்ந்துகொள்வதில் பயம்கொள்ளத் தேவையில்லை என குறிப்பிட்டுள்ளார்.