அனீன் மஹ்மூத்
ஜாமிஆ நளீமியாவின் முன்நாள் விரிவுரையளாரும் இஸ்லாமிய ஆய்வுகளுக்கான மிஷ்காத் நிறுவனம் மற்றும் அல் குர்ஆன் கற்கைகளுக்கான திறந்த கல்லூரி என்பவற்றின் ஸ்தாபகருமான உஸ்தாத் மன்ஸூர் அவர்கள் எழுதிய “அல்குர்ஆன் வன்முறையைத் தூண்டுகிறதா?” எனும் நூல் பற்றிய மற்றுமொரு அறிமுக விழா மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (20/10/2019) புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரியில் இடம்பெறவுள்ளது.

புத்தளம் காஸிமியா அரபுக் கல்லூரி மற்றும் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரி ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வின் காலை 11 மணிக்கு ஆரம்பமாகும் முதலாவது அமர்வு பெண்களுக்காகவும் மாலை 4 மணிக்கு இடம்பெறும் இரண்டாம் அமர்வு ஆண்களுக்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரபுக்கல்லூரி மாணவர்கள், உலமாக்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், புத்திஜீவிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் பங்கேற்கவுள்ள இந்நிகழ்வு, புத்தளம் மாவட்ட ஜம்மியதுல் உலமா தலைவர் அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ளது.