குளியாப்பிடிய: அனைத்து இன மக்களின் பாதுகாப்பினையும் பலப்படுத்திய எம்மை நாட்டு மக்கள் மீண்டும் தெரிவு செய்வார்கள் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். குளியாப்பிடிய நகரில் இன்று இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தேசிய பாதுகாப்பினை பலவீனப்படுத்தி மக்களை அச்சுறுத்தலுக்குள்ளாக்கிய முறையற்ற அரசாங்கம் புறக்கணிக்கப்பட வேண்டும். எமது ஆட்சியில் பாரிய போராட்டத்தின் மத்தியில் தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இன்று அரசியல் தேவைகளுக்காக பலவீனப்படுத்தியுள்ள தேசிய பாதுகாப்பு மீண்டும் பலப்படுத்தப்படும்.
நாட்டுக்க வருமானத்தை ஈட்டும் அபிவிருத்திகளை மாத்திரம் நிர்மாணித்தோம். துறைமுகம், அபிவிருத்திகள் அனைத்தும் தேசிய வருமானத்தை ஈட்டும் விதமாக காணப்பட்டது. ஆட்சி மாற்றததினை தொடர்ந்து தேசிய வளங்கள் அனைத்தும் பிற நாட்டவருக்கு விற்கும் முயற்சிகள் மாத்திரமே முன்னெடுக்கப்பட்டது. நாட்டை விற்கும் சட்டத்தை தவிர்த்து ஏனைய சட்டங்கள் அனைத்தும் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.